[Date Prev][Date Next] [Thread Prev][Thread Next] [Date Index] [Thread Index]

Re: DDP CVS commit by amachu: ddp/manuals.sgml/repository-howto repository-h ...



On Tuesday 18 Mar 2008 9:59:24 pm Raphael Hertzog wrote:
> svn.debian.org is hosted on alioth.debian.org, do you have an account
> there?
>
> It looks like there's an "amachu-guest" account there, is that yours?
> (it's part of debian-IN group but that's all)

Yes. That is me. I have made a request via that. Kindly accept me a part of 
team member.

Meanwhile, I am attaching the modified repository-howto in Tamil. Kindly 
commit the same to the repositary.

-- 
Sri Ramadoss M
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
<?xml version="1.0" encoding="utf-8"?>
<!DOCTYPE article PUBLIC "-//OASIS//DTD DocBook XML V4.2//EN"
     "http://docbook.org/xml/4.2/docbookx.dtd";>
<article>
  <articleinfo>
    <title>டெபியன் களஞ்சியங்கள் செயற்படுவது எப்படி?</title>

    <author>
      <firstname>ஆரான்</firstname>
      <surname>ஐஸோட்டான்</surname>
      <affiliation>
        <address><email>aaron@isotton.com</email></address>
      </affiliation>
    </author>

    <abstract>
      <para>இவ் ஆவணம் டெபியன் களஞ்சியம் என்றால் என்னவென்றும் அத்தகைய ஒன்றைத் தாங்கள் எவ்வாறு அமைக்கலாம் என்பது பற்றியும் அலசுகிறது.</para>
    </abstract>
  </articleinfo>
  
  <section id="intro">
    <title>சுழி</title>

    <para>டெபியன் பொதிகளின் தொகுப்பினையும் அவற்றோடு தொடர்புடைய அட்டவணை, செக்சம் முதலானக் கோப்புகள் முதலியவற்றையும் விசேடமானதொரு அடைவமைப்பினுள் கொண்டது டெபியன் களஞ்சியம் ஆகும்.  களஞ்சியமொன்றினைப் பயனரொருவர் <filename>/etc/apt/sources.list</filename>  கோப்பினுள் சேர்த்துவிட்டால் அதனுள் உறையும் அனைத்துப் பொதிகளையும் பார்வையிடவும் நிறுவிக் கொள்ளவும் இயலும். </para>

    <para>களஞ்சியமானது இணையத் தொடர்பிலும் அங்ஙனம் இல்லாததொருச் சூழலிலும்(உதாரணத்திற்கு வட்டு) இருக்கலாம். </para>

    <para>இவ் வாவணம் டெபியன் களஞ்சியங்கள் எவ்வாறு பணிபுரிகின்றன என்பது குறித்தும் அவற்றை உருவாக்கும் வழிகள் குறித்தும் அவற்றை <filename>sources.list</filename> சரியான விதத்தில் சேர்க்கும் முறைகள் குறித்தும் விவரிக்கின்றது.</para>

    <para>இவ் வாவணத்தின் பிரதானக் கோப்பு கிடைக்கும் இடம் <ulink
        url="http://www.isotton.com/debian/docs/repository-howto/"/>.</para>

    <section id="copyright">
      <title>பதிப்புரிமம் மற்றும் அளிப்புரிமை</title>

      <para>இவ் வாவணத்தின், <emphasis>டெபியன் களஞ்சியங்கள் செயற்படும் முறை?</emphasis>, 2002-2003 வருடத்திற்கான பதிப்புரிமைக்(c) கொண்டவர்<emphasis>ஆரோன் ஐசோட்டான்</emphasis> ஆவார். கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையால் வெளியிடப்பட்டுள்ள குனுவின் கட்டற்ற ஆவண உரிமம், வகை 1.1 அல்லது அதற்கு மேற்பட்ட ஒன்றினையொத்து இவ் வாவணத்தை நகலெடுக்க  மறுவிநியோகம் செய்ய மற்றும்/ அல்லது மாற்ற  அனுமதி வழங்கப் படுகிறது. முரணான பகுதிகள் இருப்பதோ, முன்னட்டை உரைகள் இருப்பதோ அல்லது பின்னட்டை உரைகள் இருப்பதோ கூடாது.</para>
  
    </section> <!-- copyright  -->

    <section id="feedback">
      <title>கருத்துக்கள்</title>

      <para>இவ் ஆவணம் குறித்த கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன.  தங்களுடைய பிற்சேர்க்கைகள் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களை <email>aaron@isotton.com</email> என்ற முகவரிக்கு அறியத் தாருங்கள். தமிழாக்கம் குறித்த கருத்துக்கள் இருப்பின் <email>amachu@ubuntu.com</email> என்ற முகவரிக்கு எழுதவும்.
      </para>
    </section> <!-- feedback -->
  </section> <!-- intro -->

  <section id="terms">
    <title>இவ் வாவணத்தில் பயன்படுத்தப் படும் பதங்கள்</title>

    <variablelist>
      <varlistentry>
        <term>வழங்கல்கள்</term>

        <listitem><para>மூன்று டெபியன் வழங்கல்கள்:
          <emphasis>நிலையானவை</emphasis>, <emphasis>சோதனையிலிருப்பவை</emphasis>
          and <emphasis>நிலையற்றவை</emphasis>.</para>
        </listitem>
      </varlistentry>

      <varlistentry>
        <term>அட்டவணைக் கோப்புகள்</term>

        <listitem><para><filename>Packages.gz</filename> மற்றும்
            <filename>Sources.gz</filename> கோப்புகள்.</para>
        </listitem>
      </varlistentry>
    </variablelist>
  </section>

  <section id="how-it-works">
    <title>களஞ்சியங்கள் செயற்படுவது எப்படி?</title>

    <para>குறைந்தபட்சம் ஒரு அடைவினையும் அதனுள்ளே டெபியன் பொதிகளையும் களஞ்சியமானது கொண்டிருக்கும். இதைத் தவிர இரண்டு கோப்புகள் இருக்கும்.   இருமப் பொதிகளுக்கான <filename>Packages.gz</filename> மற்றும் மூலப் பொதிகளுக்கான<filename>Sources.gz</filename> ஆகியன அவை.</para>

    <para>தங்களது களஞ்சியம்<filename>sources.list</filename> கோப்பில் இடப் பட்டிருந்தால் (இது குறித்து விவரமாகப் பின்னர் பார்க்கலாம்), <command>apt-get</command> ஆணையானது இருமப் பொதிகள் இடப்பட்டிருக்குமாயின் (<literal>deb</literal> துருப்புச் சொல் கொண்டு) <filename>Packages.gz</filename> கோப்பின் அட்டவணைதனைத் தருவிக்கும். மேலும் மூலப் பொதிகள் இடப்பட்டிருக்குமாயின்(<literal>deb-src</literal> துருப்புச் சொல் கொண்டு) <filename>Sources.gz</filename> கோப்பின் அட்டவணைதனைத் தருவிக்கும்.</para>

    <para><filename>Packages.gz</filename> தனில் பொதியின் பெயர், வெளியீடு, அளவு, சுருக்கமான மற்றும் விரிவான விவரங்கள் மற்றும் பிரதியொரு பொதி சார்ந்திருக்கும் பிறப் பொதிகள் குறித்த விவரங்கள் மற்றும் நமக்கு ஒவ்வாத ஏனைய சில விடயங்களும் இருக்கும்.  இவ் வனைத்து விவரங்களும் டெபியன் பொதி நிர்வாகப் பயன்பாடுகளான <command>dselect</command>, <command>aptitude</command> முதலிவற்றில் திரையிட்டுக் காட்டப்படும்.</para>

    <para><filename>Sources.gz</filename> பெயர், வெளியீடு, பிரதியொரு பொதிக்கான உருவாக்கச் சார்புகள் (உருவாக்கத்திற்கு தேவைப்படும் பொதிகள்)  மற்றும் நமக்குத் தேவைப்படாத சில விவரங்களும் இருக்கும். இவ்விவரங்களை <command>apt-get source</command> முதலிய கருவிகள் பயன்படுத்தும்.</para>

    <para>தங்களது களஞ்சியம் குறித்த தகவல்களுடன் <filename>Release</filename> எனும் பெயர் கொண்ட கோப்பும் இருக்கலாம்;<emphasis>பிணைத்தலுக்கு</emphasis> அவைப் பயன்படுகின்றன. இச்சூசகம் குறித்து இவ் வாவணத்தில் அதிகம் சொல்வப் போவதில்லை.  பிணைத்தல் குறித்து மேலுமறிய <ulink
      url="http://www.debian.org/doc/manuals/apt-howto/";>APT செயற்படும் முறை</ulink>யினை அணுகுக.</para>

    <para>ஆக தங்களது களஞ்சியத்தினை ஒரு முறை அமைத்துவிட்டால் தங்களால்  டெபியனுடன் கிடைக்கக் கூடிய பொதிகளுடன் சேர்த்து அனைத்துப் பொதிகளையும் பட்டியலிடவும் நிறுவிக்கொள்ளவும் இயலும். தாங்கள் ஒருப் பொதிதனைப் புதுப்பிக்க<command>apt-get update &amp;&amp; apt-get upgrade</command> ஆணைகள் பயன்படும். மேலும் ஒவ்வொரு பயனராலும் பொதிகள் குறித்த சுருக்கமான விவரங்களையும் ஏனைய முக்கியமானத் தகவல்களையும் அறிய முடியும்.</para>
	
    <para>இதையும் தாண்டி பல விவரங்கள் இதில் அடங்கி இருக்கின்றன. ஒழுங்காக உருவாக்கப்படுகிற பட்சத்தில், ஆதரிக்கப் படும் பிரதியொரு வழங்கலுக்கும் கட்டமைப்புக்கும் உரியத் தனித் தனிப் பொதிகளை களஞ்சியங்களால் தர இயலும். கட்டமைப்புகளைப் பற்றி பயனர் அறிய வேண்டிய அவசியமே இல்லாது அதற்குரிய பொதிதனை <literal>apt</literal>  கொணர்ந்து கொடுக்கும்.  மேலும் <literal>பிரதான</literal>  <literal>கட்டுடைய</literal> மற்றும் <literal>கான்ட்ரிப்</literal> என டெபியன் பொதிகள் பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளமைப் போல், தங்கள் பொதிகளையும் பாகங்களாகப் பிரிக்க இயலும்.  குறிப்பாக தங்கள் மென்பொருள் பல்வேறு தளங்களுக்குரியதாக இருப்பின் தாங்கள் பொதி களஞ்சியங்களை அதிகம் விரும்புவீர்கள்.</para>	

  </section> <!-- how-it-works -->

  <section id="setting-up">
    <title>களஞ்சியமொன்றினை அமைப்பது எப்படி</title>

    <para>இரண்டு விதமானக் களஞ்சியங்கள் உண்டு. முதலாவது சற்றே கடினமானது. இதனைப் பொறுத்த மட்டில் பயனர் களஞ்சியத்தின் பிரதானப் பாதை, வழங்கல் மற்றும் தேவையானப் பாகங்களைக் கொடுத்தல் வேண்டும் (கட்டமைப்புக்கு உகந்த பொதிகள் இருப்பின் apt தானாகவே கொணர்ந்து கொடுக்கும்). இரண்டாவது மிகவும் எளிமையானது. பயனர் குறிப்பிட்டப் பாதைதனைத் தருவார் (சரியான பொதி எதுவெனத் தீர்மானிக்க apt விசேடமாக எதுவும் செய்யாது.) முந்தயவை அமைப்பதற்கு சற்றே கடினமானவையாக இருப்பினும் பயன்படுத்துவதற்கு இலகுவானவை. சிக்கலான பலதள களஞ்சியங்களுக்கு இதுவே பரிந்துரைக்கப்படுகிறது. பிந்தயவை சுலபத்தில் அமைக்கத் தக்கவையாயினும் சிறிய மற்றும் தனியொரு கட்டமைப்புக் களஞ்சியங்களுக்கு மாத்திரமே பரிந்துரைக்கப்படுகிறது.
    </para>

    <para>முந்தையதை <emphasis>தானியங்கு களஞ்சியமெனவும் </emphasis> பிந்தையதை <emphasis>துச்சக் களஞ்சியமெனவும்</emphasis> வழங்குவோமாக.</para>
    
    <section>

      <title>தானியங்கு களஞ்சியங்கள்</title>

      <para>டெபியன் கட்டமைப்புகள் மற்றும் பாகங்களுக்கான தானியங்கு களஞ்சியத்தின் வழக்கிலுள்ள அடைவமைப்பு வருமாறு:</para>

      <example id="debian-repository-example">
        <title>வழக்கமானதொரு டெபியன் களஞ்சியம்</title>

      <screen>(your repository root) 
| 
+-dists
  | 
  |-stable
  | |-main
  | | |-binary-alpha 
  | | |-binary-arm
  | | |-binary-...
  | | +-source 
  | |-contrib
  | | |-binary-alpha 
  | | |-binary-arm
  | | |-binary-...
  | | +-source 
  | +-non-free
  |   |-binary-alpha
  |   |-binary-arm
  |   |-binary-...
  |   +-source
  |
  |-testing 
  | |-main
  | | |-binary-alpha 
  | | |-binary-arm
  | | |-binary-...
  | | +-source 
  | |-contrib
  | | |-binary-alpha 
  | | |-binary-arm
  | | |-binary-...
  | | +-source 
  | +-non-free
  |   |-binary-alpha
  |   |-binary-arm
  |   |-binary-...
  |   +-source
  |
  +-unstable 
    |-main
    | |-binary-alpha 
    | |-binary-arm
    | |-binary-...
    | +-source 
    |-contrib
    | |-binary-alpha 
    | |-binary-arm
    | |-binary-...
    | +-source 
    +-non-free
      |-binary-alpha
      |-binary-arm
      |-binary-...
      +-source</screen>

      </example>

      <para>கட்டற்ற பொதிகள் <literal>main</literal> (பிரதான) பாகத்துக்குள் உறையும்; தனியுரிம மென்பொருட்கள் <literal>non-free</literal> (கட்டுடைய) பாகத்திலும், தனியுரிம மென்பொருளைச் சார்ந்த கட்டற்ற மென்பொருட்கள் 
        <literal>contrib</literal> (கான்டிரிப்) பாகத்திலும் உறையும்.பதினொரு வகையானக் கட்டமைப்புகளை டெபியன் தற்சமயம் ஆதரிக்கின்றது. சுருக்கமாக இருக்கட்டுமே என்று அவற்றுள் பல இவ்விடத்தே தவிர்க்கப் பட்டுள்ளது.
      </para>

      <para>ஒவ்வொரு <filename>binary-*</filename> அடைவும் ஒரு <filename>Packages.gz</filename> கோப்பினையும் அவசியமாயின் <filename>Release</filename> கோப்பினையும் கொண்டிருக்கும். ஒவ்வொரு <filename>source</filename> அடைவும் ஒரு <filename>Sources.gz</filename> கோப்பினையும் அவசியமாயின் <filename>Release</filename> கோப்பினையும் கொண்டிருக்கும். அட்டவணைக் கோப்புகள் இருக்கும் அதே அடைவில் தான் பொதிகளும் இருத்தல் வேண்டும் எனும் கட்டாயமேதும் இல்லாதிருப்பது இதிலிருந்து புலப்படும். ஏனெனில் அட்டவணைக் கோப்புகள் பொதிகள் இருக்கும் பாதையினைக் கொண்டிருக்கும். குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமாயின் அட்டவணைக் கோப்புகள் களஞ்சியத்தின்  <emphasis>வேறெந்தப் </emphasis> பகுதியிலும் இருக்கலாம்.<link linkend="pools">pools</link> உருவாக்கத்தை இது சாத்தியப் படுத்துகிறது.</para>

      <para>எத்தனை வழங்கல்களையும் பாகங்களையும் தாங்கள் விரும்புகிறீர்களோ அவற்றை தங்கள் விருப்பம் போல் உருவாக்கிக் கொள்ளலாம். இங்கே குறிப்பிடப் பட்டவை டெபியனில் பயன்படுத்தப் படுபவை. உதாரணத்திற்கு தாங்கள் <literal>stable</literal>, <literal>testing</literal>, <literal>unstable</literal> என்றிருப்பதற்குப் பதிலாக <literal>current</literal> எனவும் <literal>beta</literal> எனவும் வழங்கல்களை உருவாக்கிக் கொள்ளலாம். <literal>main</literal>, <literal>contrib</literal> மற்றும் <literal>non-free</literal> என்றிருப்பதற்குப் பதிலாக <literal>chitirai</literal>, <literal>vaikasi</literal>, <literal>aani</literal> மற்றும் <literal>aadi</literal> எனும் பெயர் கொண்ட பாகங்களை உருவாக்கிக் கொள்ளலாம்.
		
      </para>

      <para>தாங்கள் விரும்பும் வகையில் பாகங்களுக்கு பெயரிட்டுக் கொள்ளலாகும் எனினும், வழக்கத்திலுள்ள டெபியன் வழங்கல்களைப் பயன்படுத்துவது சமயோசிதமானது. இதைத்தான் டெபியன் பயனர்களும் எதிர்பார்ப்பர்.</para>

      </section>

    <section>

      <title>துச்சக் களஞ்சியம்</title>

      <para>ஒரு மூல அடைவினையும் தாங்கள் விரும்பும் படிக்கு பல துணை அடைவுகளையும் துச்சக் களஞ்சியங்கள் கொண்டிருக்கும். இங்கே பயனர்கள் களஞ்சியத்தின் மூல அடைவிற்கானப் பாதையினைச் சுட்ட வேண்டியிருப்பதோடு அட்டவணைக் கோப்புகள் உறையும் அடைவிற்கும் மூல அடைவிற்குமான தொடர்புப் பாதையினையும் சுட்ட வேண்டியிருப்பதால் தாங்கள் விரும்பியதைச் செய்யலாம்(அனைத்தையும் மூல அடைவிற்குள்ளேயே இட்டு விட்டு தொடர்புப் பாதைதனை வெறுமனே<quote><filename>/</filename></quote>
      எனவும் கொடுக்கலாம்).</para>

      <example id="trivial-example">
        <title>இரண்டு துணை அடைவுகளோடு கூடிய துச்சக் களஞ்சியமொன்று</title>
        
        <screen>(your repository root)
|
|-binary
+-source</screen>
      </example>

    </section>

    <section>
      <title>அட்டவணைக் கோப்புகள் உருவாக்கம்</title>

      <para><filename>Packages</filename> கோப்பினை <command>dpkg-scanpackages</command> ஆணையும் 
      <filename>Sources</filename> கோப்பினை  <command>dpkg-scansources</command> ஆணையும் உருவாக்கும்.</para>

     <para>இவையிரண்டும் தத்தமது முடிவுகளை stdout தனுக்கு வெளிக்கிடும். எனவே சுருக்கப் பட்ட கோப்புகளை உருவாக்க கீழ்காணும் படியான தொடர் ஆணைகளைப் பயன்படுத்தவும்:
     <command>dpkg-scanpackages
     <replaceable>arguments</replaceable> | gzip -9c &gt;
     Packages.gz</command>.</para>

      <para>இவ்விரு கருவிகளும் ஒரே மாதிரி செயல் புரிபவை. அவை இரண்டுமே இரண்டு துப்புகளைப் பெறும்(உண்மையில் இன்னும் அதிகம் உண்டு. அவற்றைப் பற்றி இங்கு ஆழமாகக் காண்பதைக் காட்டிலும் அவ் அவற்றிற்கான கையேட்டினைப் பார்க்கவும்) . முதலாவது பொதிகள் எவ்விடத்தில் உறைகின்றன என்பதற்கானத் துப்பு. அடுத்தது<emphasis>மீறுதற்கானக் கோப்பு</emphasis>. சாதாரண களஞ்சியங்களுக்கு கோப்புகளை மீறுவது அவசியம் இல்லையென்றாலும் அது தேவைப்படும் துப்பாகையால் நாம் வெறுமனே  <literal>/dev/null</literal> எனக் கொடுக்கிறோம்.</para>

      <para><command>dpkg-scanpackages</command> <filename>.deb</filename> பொதிகளை அலசும்;
        <command>dpkg-scansources</command> <filename>.dsc</filename> கோப்புகளை அலசும். எனவே <filename>.orig.gz</filename>,
        <filename>.diff.gz</filename> மற்றும் <filename>.dsc</filename>
        கோப்புகளை ஒன்றாகப் போடுவது அவசியமாகிறது.<filename>.changes</filename> கோப்புகளின் அவசியம் இல்லை.</para>

      <para><xref linkend="trivial-example"/> தனில் இருப்பது போல் தங்களிடம் துச்சக் களஞ்சியமொன்று இருக்குமாயின், கீழ்காணும் படிக்கு தாங்கள் இரு அட்டவணைக் கோப்புகளை உருவாக்க இயலும்:</para>
      
      <screen>$ cd my-repository
	$ dpkg-scanpackages binary /dev/null | gzip -9c &gt; binary/Packages.gz
	$ dpkg-scansources source /dev/null | gzip -9c &gt; source/Sources.gz</screen>
       
     <para><xref
     linkend="debian-repository-example"/> தனில் இருப்பது போல் கடினமானதொரு களஞ்சியத்தினைத் தாங்கள் பயன்படுத்தினால், இப்பணியை தானியங்கச் செய்ய சில நிரல்கள் இயற்ற வேண்டியிருக்கும்.</para>

     <para>இவ்விரு கருவிகளுக்கான <replaceable>pathprefix</replaceable> துப்பினைப் பயன்படுத்தி இந்நெறிதனை சற்றே சுலபப் படுத்தலாம். இதனை வாசிப்பவர் பயிற்சி செய்து பார்க்க விடப்படுகிறது.(கையேட்டில் இவை ஆவணப் படுத்தப் பட்டுள்ளன.)</para>

    </section>

    <section id="release">
      <!-- todo: Release should be between <filename> tags, but then
      xmltex won't compile it --> 
      <title>வெளியீட்டுக் கோப்புகள் உருவாக்கம்</title>

    <para>தங்கள் களஞ்சியத்தின் பயனர்கள் அதனுடனானப்<emphasis>பிணைப்பினைப்</emphasis> பயன்படுத்திட அட்டவணைக் கோப்பு இருக்கக் கூடிய ஒவ்வொரு அடைவிலும் ஒரு <filename>Release</filename> கோப்பினை தாங்கள் சேர்த்தல் வேண்டும். (பிணைப்பு குறித்து மேலுமறிய<ulink url="http://www.debian.org/doc/manuals/apt-howto/";>APT
    செயற்படுவது எப்படி?</ulink> பக்கத்தின் துணையினை நாடுக.)</para>
      
    <para>கீழ்காணும் படிக்கு எளிமையும் சுருக்கமுமான வடிவமைப்பினை<filename>Release</filename> கோப்புகள் கொண்டிருக்கும்:</para>

      <screen>Archive: <replaceable>பெட்டகம்</replaceable>
Component: <replaceable>பாகம்</replaceable>
Origin: <replaceable>தங்களது நிறுவனம்</replaceable>
Label: <replaceable>தங்கள் நிறுவனத்தின் டெபியன் களஞ்சியம்</replaceable>
Architecture: <replaceable>கட்டமைப்பு</replaceable></screen>

      <variablelist>
        <varlistentry>
          <term><literal>Archive</literal></term>

          <listitem>
            <para>இவ் வடைவில் இருக்கக் கூடிய பொதிகளுக்கான வழங்களின் பெயர் அதாவது,
              i.e. <literal>நிலையான</literal>,
              <literal>சோதனையிலுள்ள</literal> அல்லது
              <literal>நிலையற்ற</literal>.</para>
          </listitem>
        </varlistentry>

        <varlistentry>
          <term><literal>Component</literal></term>

          <listitem>
            <para>அடைவில் இருக்கக் கூடிய பொதிகளுக்கான பாகம், உதாரணத்திற்கு <literal>main</literal>,
            <literal>non-free</literal>, அல்லது
            <literal>contrib</literal>.</para>
          </listitem>
        </varlistentry>

        <varlistentry>
          <term><literal>Origin</literal></term>

          <listitem>
            <para>பொதிகளைச் செய்தவரின் பெயர்.</para>
          </listitem>
        </varlistentry>

        <varlistentry>
          <term><literal>Label</literal></term>

          <listitem>
            <para>பொதிகள் அல்லது களஞ்சியத்திற்கு பொருத்தமானதொரு வாசகம். உங்கள் விருப்பம்.</para>
          </listitem>
        </varlistentry>

        <varlistentry>
          <term><literal>Architecture</literal></term>

          <listitem>
            <para>இவ் அடைவில் இருக்கும் கோப்புகளுக்கான கட்டமைப்பு,
              உதாரணத்திற்கு <literal>i386</literal>,
              <literal>sparc</literal> அல்லது
              <literal>source</literal>.</para>
          </listitem>
        </varlistentry>
      </variablelist>

      <para>பிணைத்தல் நடைபெற <literal>Archive</literal> மற்றும்
        <literal>Architecture</literal> சரியாக இருத்தல் அவசியம். மற்றவை அவ்வளவு முக்கியம் இல்லை.</para>
    </section>

    <section id="pools">
      <title>குடைகள் உருவாக்கம்</title>

      	<para>இத்தகைய தானியங்கு களஞ்சியங்களில், பொதிகளை பல்வேறு அடைவுகளுக்குள் இடுவது நிர்வகிப்பதில் அதிக சிக்கலை ஏற்படுத்தலாம். இதனால் கொள்ளிடம் மற்றும் அலையகல விரயமும் அதிகம் ஏற்படும். ஏனெனில் அனைத்து கட்டமைப்புகளுக்கும் பொருந்தக் கூடிய நிறையப் பொதிகள் (உதாரணத்திற்கு ஆவணமாக்கப் பொதிகள்)  உண்டு.</para>

        <para>இத்தகைய தருணங்களில் விடையாய் அமைவது <emphasis>குடை</emphasis>. களஞ்சியத்தின் மூல அடைவிற்குள்ளே<emphasis> அனைத்து</emphasis> பொதிகளையும்(அனைத்துக் கட்டமைப்புகள் மற்றும் வழங்கல்களுக்கான இருமங்களும் மூலங்களும்) கொண்டிருக்கும் அடைவு குடையாகும். மீறுதற்கான கோப்புகள் மற்றும் நிரல்கள் சிலவற்றின் சமயோசித கூட்டின் வாயிலாக பல்வேறு சிக்கல்களைத் தவிர்க்கலாம் (அவை இவ் ஆவணத்தில் அடங்கப்பெற வில்லை). குடை களஞ்சியத்திற்கு டெபியன் களஞ்சியமே ஒரு சிறந்த உதாரணம் ஆகும்.</para>

      	<para>பெரியதொரு களஞ்சியத்துக்கே குடைகள் அதிகம் பயன்படும். அத்தகைய ஒன்றை இவ் ஆவணத்தின் பிரதான ஆசிரியர் செய்ததில்லை. அத்தகைய பகுதியொன்றை சேர்ப்பது உகந்தது எனத் தாங்கள் விரும்பிடின் அத்தகைய ஒன்றை இயற்றவும் அல்லது அவரைத் தொடர்பு கொள்ளவும்.</para>

    </section>

    <section>
      <title>கருவிகள்</title>
      <para>டெபியன் பெட்டகங்கள் உருவாக்கத்தை தன்னியக்கமாக்கி எளிமையாக்க பலக் கருவிகள் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தகுந்த சில இங்கே பட்டியலிடப்படுகின்றன.</para>
      <para>டெபியனின் பெட்டகத்திலுள்ளது போல் டெபியன் பொதிக் கோப்புகளின் தொகுப்பொன்றை உரிய பெட்டக வழிவகைக்குள் நகர்த்த<command>apt-ftparchive</command> பயன்படுகிறது. இது<literal>apt-utils</literal> பொதியின் ஒரு அங்கமாகும்.</para>
      <para>டெபியனின் பெட்டகத்திலுள்ளது போல் டெபியன் பொதிக் கோப்புகளின் தொகுப்பொன்றை உரிய பெட்டக வழிவகைக்குள் நகர்த்த<command>apt-move</command> பயன்படுகிறது.</para>
    </section>

  </section> <!-- setting-up -->

  <section id="using-a-repository">
    <title>களஞ்சியமொன்றினை பயன்படுத்துவது எப்படி</title>

    <para>எத்தகைய களஞ்சியத்தினைத் தாங்கள் உருவாக்கியிருக்கிறீர்கள் அதாவது இருமமா மூலமா அல்லது தானியங்கியா துச்சமா என்பதனைப் பொறுத்து களஞ்சியமொன்றினைப் பயன்படுத்துவது சுலபமானதுதான்.</para>
    
    <para>பிரதியொரு களஞ்சியமும்
    <filename>sources.list</filename> கோப்பில் ஒரு வரி பெறும்; இருமமாக இருப்பின்
    <literal>deb</literal> ஆணையும், மூலமாக இருப்பின்
    <literal>deb-src</literal> ஆணையும் பயன்படுத்தப்படும்.</para>

    <para>பிரதியொரு வரியும் கீழ்காணும் நெறிதனைக் கொண்டிருக்கும்:

    <screen>deb|deb-src <replaceable>uri</replaceable> <replaceable>distribution</replaceable> [<replaceable>component1</replaceable>] [<replaceable>component2</replaceable>] [...]</screen>

    களஞ்சியத்தின் மூலத்தினைக் குறிப்பது <replaceable>uri</replaceable> ஆகும். உதாரணத்திற்கு
    <literal>ftp://ftp.yoursite.com/debian</literal>,
    <literal>http://yoursite.com/debian</literal>, அல்லது, உள்ளிருப்புக் கோப்புகளுக்கு,
    <literal>file::///home/joe/my-debian-repository</literal>.  கடைசியில் சாய்வுக் குறியிடுவது நமது விருப்பமாகும்.</para>

    <para>தானியங்கு களஞ்சியங்களைப் பொறுத்த மட்டில் ஒரு வழங்கலையும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களையும் குறித்தல் அவசியம். வழங்கலின் இறுதியில் சாய்வுக் குறி இடுதல் ஆகாது.</para>

    <example>
      <!-- todo: sources.list should be tagged as <filename>, but xmltex
      doesn't support that -->
      <title>இவ் வாவணத்தினை இயற்றியவரது sources.list லிருந்து இரு வரிகள் வருமாறு:</title>

      <screen>deb ftp://sunsite.cnlab-switch.ch/mirror/debian/ unstable main contrib non-free
deb-src ftp://sunsite.cnlab-switch.ch/mirror/debian/ unstable main contrib non-free</screen>

      <para><literal>ftp://sunsite.cnlab-switch.ch/mirror/debian/</literal> என்பதனை மூலமாகக் கொண்ட தானியங்கு இரும மற்றும் மூல களஞ்சியத்தினை இவ்வரிகள் குறிப்பிடுகின்றன.<literal>unstable</literal> வழங்கலையும் 
      <literal>main</literal>, <literal>contrib</literal> மற்றும்
      <literal>non-free</literal> பாகங்களையும் உள்ளடக்கியுள்ளதைப் பார்க்கலாம்.</para>
    </example>

	<para>தானியங்கு களஞ்சியமாக இல்லாது இருப்பின்
	<emphasis>distribution</emphasis> அட்டவணைக் கோப்பிற்கான தொடர்பு பாதையினை சுட்டி நிற்கும். மேலும் அது சாய்வெழுத்தினைக் கொண்டு முடிந்திருத்தல் வேண்டும். பாகங்கள் பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை.</para>

    <example>
      <title>இவ் ஆவணதாரரின் 
      <filename>sources.list</filename> கோப்பிலிருக்கும் இரு துச்சக் களஞ்சியங்கள்:</title>

      <screen>deb file:///home/aisotton/rep-exact binary/
	      deb-src file:///home/aisotton/rep-exact source/</screen>

	<para>இவ்விரு வரிகளில் முதலாவது<filename>/home/aisotton/rep-exact/binary</filename> கணினியில் இருக்கும் இருமக் களஞ்சியத்தினையும்; இரண்டாவதான <filename>/home/aisotton/rep-exact/source</filename> மூலக்  களஞ்சியத்தினையும் குறிக்கின்றன.</para>
	
    </example>
  </section> <!-- using-a-repository -->

  <section>
    <title>இவற்றையும் வாசிக்க</title>

    <itemizedlist>
      <listitem>
        <para><command>apt-ftparchive</command>
        தனின் ஆவணம்.</para>
      </listitem>

      <listitem>
        <para><command>apt-get</command> மற்றும் <literal>apt</literal> க்கான ஆவணம்.</para>
      </listitem>

      <listitem>
        <para><command>apt-move</command> தனின் ஆவணம்.</para>
      </listitem>

      <listitem>
        <para>நிகழுலகக் களஞ்சியங்கள் குறித்து அறிய<ulink url="http://www.apt-get.org/"/>.</para>
      </listitem>
        
      <listitem>
        <para><ulink
            url="http://www.debian.org/doc/manuals/apt-howto/";>APT
            செயற்படுவது எப்படி?</ulink>.</para>
      </listitem>


      <listitem>
        <para><command>dpkg-scanpackages</command>
          தனின் ஆவணம்.</para>
      </listitem>

      <listitem>
        <para><command>dpkg-scansources</command>
          தனின் ஆவணம்.</para>
      </listitem>

      <listitem>
        <para><literal>sources.list(5)</literal> தனின் உதவிப் பக்கம்.</para>
      </listitem>
    </itemizedlist>

  </section>
</article>

Reply to: